​ஆனைமலை அருகே புளிய மரம் முறிந்து விழுந்து விபத்து – 3 மின் கம்பங்கள் சேதம், பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது!!

ஆனைமலை அடுத்த மீன்கரை சாலை பூச்சனாரி பகுதியில் திடீரென பிரமாண்ட புளிய மரம் ஒன்று முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவ்விபத்தில் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த 3-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் பலத்த சேதமடைந்தன. மரம் முறிந்து விழுந்த சமயத்தில் மழை பெய்து கொண்டிருந்ததால் சாலையில் ஆள் நடமாட்டம் இன்றி இருந்தது. மேலும் மரமானது பிரதான சாலையில் விழாமல் பக்கவாட்டு குறுக்குச் சாலையில் விழுந்ததால் நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதமும் உயிரிழப்புகளும் தவிர்க்கப்பட்டன.

இருப்பினும் மின் கம்பங்கள் சேதமடைந்ததால் அப்பகுதியில் மின் விநியோகம் முற்றிலும் தடைபட்டு ஒட்டுமொத்த பகுதியும் இருளில் மூழ்கியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மின்வாரிய ஊழியர்கள் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி சேதமடைந்த மின் கம்பங்களைச் சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் மின் விநியோகம் சீர் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர் உங்கள்
𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ் குமார்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts