பொள்ளாச்சி அருகே கொடூர சாலை விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு!!

பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் நல்லாம்பள்ளி பிரிவு அருகே நடந்த கொடூர சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை மதுக்கரை குறுக்கம்பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் அவரது மனைவி நர்மதா மகள்கள் ஆர்த்தி, பூரணி மற்றும் வீட்டின் அருகே வசிக்கும் ராமன் ஆகிய 5 பேர் காரில் பொள்ளாச்சி – உடுமலை நெடுஞ்சாலை வழியாக கோவை நோக்கி வந்துகொண்டிருந்தனர்.

அப்போது நல்லாம்பள்ளி பிரிவு அருகே சாலை பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த தண்ணீர் லாரியின் பின்புறத்தில் கார் எதிர்பாராதவிதமாக வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த பயங்கர விபத்தில் கார் முற்றிலும் உருக்குலைந்தது. காரில் பயணித்த கனகராஜ், நர்மதா, ஆர்த்தி, பூரணி மற்றும் ராமன் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்
𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts