
கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ‘லைஃப் ஆப்டர் லைஃப் 2026’ (Life After Life 2026) மற்றும் உடல் உறுப்பு தானமளித்தோரை நினைவுகூரும் நினைவுச் சுவர் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உலகளவில் ஆகஸ்ட் மாத இரண்டாவது வாரத்தில் கடைப்பிடிக்கப்படும் உடல் உறுப்பு தானப் பாராட்டு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில், உடல் உறுப்பு தானம் மூலம் பலருக்கு மறுவாழ்வு அளித்த கொடையாளர்களின் குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
மருத்துவமனையின் தலைவர் நல்லா ஜி.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் கலந்து கொண்டு, தானமளித்தோரை நினைவுகூரும் நினைவுச் சுவரை திறந்து வைத்தார்.
மேலும், மேற்குத் தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னணி மையமாக விளங்கி வரும் கேஎம்சிஹெச் மருத்துவமனையின் சேவையை பாராட்டிப் பேசினார்.
கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி பேசுகையில், உடல் உறுப்பு தானம் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு புதிய வாழ்வு கிடைத்துள்ளதாகவும், அந்த உயரிய தியாகத்தை செய்த கொடையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவமனை எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி, மிகுந்த துயரமான தருணத்திலும் பிறரின் உயிரைக் காப்பாற்ற உறுப்பு தானம் செய்யும் குடும்பங்களின் மனிதநேயத்தை பாராட்டினார்.
தொடர்ந்து நிகழ்வின் ஒரு பகுதியாக மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது..
நிகழ்ச்சியில், மருத்துவ இயக்குநர் டாக்டர் முருகன்,. நரம்பியல் நிபுணர் டாக்டர் பி. பாஸ்கர்,,தீவிர சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ். யுவராஜ், மயக்கவியல் நிபுணர் டாக்டர் அருண்குமார்,உட்பட மருத்துவர்கள், உறுப்பு தானம் அளித்த குடும்பத்தினர் பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.






