கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் துளிர் வாசகர் திருவிழா!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் மாதம் தோறும் வழங்கப்படும் துளிர் மாத இதழ் ஜூலை மாதத்திற்கான மாத இதழில் மாணவர்களுக்கு வாசிப்பு திருவிழா ஆக 03 அன்று
நடத்தப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வினை தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வ கோட்டை ஒன்றிய தலைவரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரஹ்மத்துல்லா ஒருங்கிணைத்து துளிர் இதழ் வாசிப்பதால் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மை மேம்படுத்தும்எனவும், அறிவியல் சிந்தனையை உருவாக்கும், புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதற்கு துளிர் மாத இதழ் மிக சிறந்த வாய்ப்பை வழங்குகிறது என்றும் பேசினார்.

ஜூலை மாத துளிர் இதழில் மாணவ, மாணவிகள் விட்ருவியன் மனிதனை சந்திப்போமா என்ற தலைப்பில் எட்டாம் வகுப்பு மாணவி ரிதன்யா மாறனும், எல் நினோ என்ற தலைப்பில் முகேஸ்வரன் என்ற மாணவரும், சப்போட்டாவின் சபதம் என்ற தலைப்பில் முகமது ஆசிக் என்ற மாணவரும், 1121 புதிய உயிர்கள் என்ற தலைப்பில் சுபிக்ஷா என்ற மாணவியும், டியாண்டா உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் புது வரவு என்ற தலைப்பில் ஹர்ஷினி என்ற மாணவியும், நிலா நிலா உருண்டு வா என்ற தலைப்பில் சத்யா ஸ்ரீ என்ற மாணவியும்,மணிக்கியின் 3300 கிலோ மீட்டர் பயணம் என்ற தலைப்பில் தவஸ்ரீ என்ற மாணவியும், லூகா என்ற தலைப்பில் பூஜாஸ்ரீ என்ற மாணவியும், யார் கடைசியில் உருளுவது என்ற தலைப்பில் ஹஸ்விந்ராஜ் என்ற மாணவரும், பென்சில் பை என்ற சோதனையை பிரியதர்ஷினி, சக்தி பிரியா என்ற மாணவிகள் செய்து காண்பித்தனர். எங்கே போகுது மேகம் என்ற தலைப்பில் தீபிகா என்ற மாணவியும், தொலைபேசி அழைப்பிலிருந்து நிலா பயணம் வரை மின்காந்த அலைகளின் பாதை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வாசிப்பு திருவிழாவில் கட்டுரைகளை விளக்கி பேசினார்கள். முன்னதாக மாணவி ரிதன்யா அனைவரையும் வரவேற்றார். மாணவர் முகேஷ் நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts