
கோயம்புத்தூர், ஆக. 6
கோவையில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் , 2026–2027-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் மன்றத் தொடக்க விழா இன்று காலை கல்லூரியின் முன்னாள் மாணவியர் பொன்விழா அரங்கில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஜி.ஆர்.ஜி. கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர். நந்தினி வரவேற்புரையாற்றினார். அவர் தனது உரையில், தலைமைத்திறன், ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் சமூகப் பங்களிப்பை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதுடன், கல்லூரி வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி திறன்களை மேம்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
கல்லூரி முதல்வர் பி. பி. ஹாரதி, மாணவியர்களுக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்வை நடத்தி வைத்தார். நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த பண்புகளுடன் சமூகத்திற்குப் பயனுள்ள குடிமக்களாகத் திகழ வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட ‘வெரண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ்’ நிறுவனத்தின் துணைத் தலைவர் திரு. சிவக்குமார் கணேசன் தொடக்க உரையாற்றினார். அவர் பேசுகையில், இன்றைய போட்டி நிறைந்த உலகில் தொடர்ச்சியான கற்றல், திறன் மேம்பாடு மற்றும் புதுமை சிந்தனை மிக அவசியம். தொழிற்துறைக்கு ஏற்ற திறன்களை வளர்த்துக் கொண்டு, எதிர்கால வேலைவாய்ப்புகளுக்குத் தன்னம்பிக்கையுடன் தயாராக வேண்டும். தலைமைத்திறன், விமர்சன சிந்தனை மற்றும் நெறிமுறைகளே தொழில்வாழ்வின் வெற்றிக்கு அடிப்படை” என்று மாணவியரை ஊக்கப்படுத்தினார்.
நிறைவாக, மாணவர் மன்றத் தலைவர் செல்வி ஜெய்சிகா வர்ஷினி கே. நன்றியுரையாற்றினார். நிகழ்வில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.





