
வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொள்ளாச்சி பழங்குடியினர் நல அலுவலர் தலைமையில் மற்றும் வால்பாறை வட்டாட்சியர் முன்னிலையில் பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இம்முகாமில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை கிளையின் சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அம்மனுவில் சின்கோனா பழங்குடியினர் கிராம மக்களுக்குச் சுத்தமான குடிநீர் சாலை வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் உடனடியாக செய்து தரப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
மேலும் கணபதி ஆற்றில் பாலம் இல்லாததால் மழைக்காலங்களில் வனக் கிராமத்திற்குச் செல்வதற்கும் அவசர மருத்துவச் சிகிச்சை பெறச் செல்வதற்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பாலத்தை உடனே அமைத்துத் தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்





