எட்டையாபுரம் அருகே பள்ளி ஆசிரியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவன் கைது!

தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள சிங்கிலிபட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது, இந்தப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக (47) வயது மதிக்கத்தக்கபெண் ஒருவர் கோவில்பட்டியில் இருந்து தினமும் பேருந்தில் வந்து, பேருந்து நிலையத்தில் இறங்கி பள்ளிக்கு செல்வது வழக்கம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் இந்த பெண் ஆசிரியரை தினமும் அதே கிராமத்தை சேர்ந்த கூடலிங்கம் என்பவரின் மகன் முத்துக்கிருஷ்ணன் (44) என்பவன் தினமும் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து, வழிமறித்து ஆபாசமாக பேசி, நடந்து செல்லும்போது பின்னால் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்து தினமும் அச்சுறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம் போல் பேருந்து நிலையத்திலிருந்து நடந்து சென்ற அந்தபெண் ஆசிரியரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்து பாலியல் தொல்லை கொடுத்த முத்துகிருஷ்ணனை அப்பகுதி மக்கள் பிடித்து ‘தர்ம அடி’ கொடுத்து எட்டையாபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதனைத்தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து முத்துக்கிருஷ்ணனை கைது செய்த எட்டையாபுரம் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று தங்களது பாலியல் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

அதேபோல் பள்ளிக்கு வரும் சிறுமிகளின் பெற்றோர்களை வழிமறித்து முத்துகிருஷ்ணன் செல்போன் எண் தருமாறு கேட்டு பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பகுதியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts