காவல்துறையினரால் அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை ரொட்டிக்கடை, சோலையார் டேம் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் தங்கும் விடுதிகள் உள்ளது. இதில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வந்து தங்குகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறை காவல் ஆய்வாளர் திரு இன்ஸ்பெக்டர் செல்வம் அவர்கள் தங்கும் விடுதி உரிமையாளர் சங்கம் மற்றும் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதில் சந்தேகப் படும் நபர்களை தங்கும் விடுதியில் அனுமதிக்க வேண்டாம், விடுதிகளில் தங்கும் நபர்கள் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு கூச்சல்  போட்டும் இசைக்கருவிகளை சத்தமாக வைத்தும் அருகாமையில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு தொந்தரவு செய்யக்கூடாது, அடுத்தவர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும்,தங்கும் விடுதி உரிமையாளர்கள் வரும் சுற்றுலா பயணிகளுக்கு வாகன ஒதுக்கீடு வசதி செய்ய வேண்டும். இது போன்ற நல்ல கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வால்பாறை காவல் ஆய்வாளர் கூறினர்.

இந்த ஆலோசனைக்கூட்டம் வால்பாறை வட்டார தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து வால்பாறை துளசி அம்மாள் மண்டபத்தில் நடைபெற்றது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறை செய்தியாளர்

-திவ்யக்குமார்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts