
கோவை: சிவாஞ்சலியின் டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், கோவை மற்றும் குமரகுரு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் ‘ஒடிசி – The Soul’s Blossoming’ என்ற கிட்டார் இசையை மையமாகக் கொண்ட இசை-காட்சி நிகழ்ச்சி, வரும் ஆகஸ்ட் 15 மற்றும் 16-ஆம் தேதி குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் உள்ள இராமானந்த அடிகளார் அரங்கில் நடைபெறுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது குறித்து சிவாஞ்சலியின் டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் இணைச் செயலாளர் காயத்ரி பிரகாஷ் மற்றும் பிரகாஷ் சிதம்பரம், கிட்டார் துறைத் தலைவர் பிரதீபன், குமரகுரு கல்வி நிறுவனங்கள் டாக்டர் பிரிய தர்ஷினி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிவாஞ்சலியின் டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பங்கேற்கின்றனர் என்றும். கிட்டார் இசையுடன் காட்சியமைப்பு மற்றும் கலை நிகழ்த்துதல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றனர்.
டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸின் வழக்கமான நடைமுறையைப் பின்பற்றி, ஒடிசி நிகழ்ச்சிக்கும் ‘Pay as You Wish’ முறையில் அனுமதி வழங்கப்படுகிறது என்றும் இதற்கென நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எதுவும் இல்லை என்றும் பார்வையாளர்கள் தங்களால் இயன்ற தொகையை விருப்பத்திற்கேற்ப வழங்கலாம் என தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கான அனுமதிச் சீட்டுகளை www.tfacbe.com/event-list என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி,போத்தனுர்.





