
கோவை மாவட்டம்
பொள்ளாச்சி வால்பாறைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறுகிய கொண்டைஊசி வளைவுகள் கொண்ட இப்பாதையில் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் தொடர் அறிவுறுத்தல் வழங்கி வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் இராமநாதபுரம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 19 சுற்றுலா பயணிகள் தனியார் வேனில் வால்பாறைக்கு சென்றுவிட்டு மீண்டும் பொள்ளாச்சி நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். கொண்டை ஊசி வளைவு பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த குழந்தைகள் உள்பட 12 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர்
உங்கள்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.








