
கந்தர்வகோட்டை ஆக 18
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தற்காப்பு கலை கராத்தே பயிற்சி தொடங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய தலைவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா நிகழ்வை வரவேற்று பேசும் பொழுது தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் கராத்தே, சிலம்பம், ஜூடோ மற்றும் டேக்வாண்டோ போன்ற தற்காப்புக் கலைப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
மாணவிகளிடம் தன்னம்பிக்கையை வளர்த்தல் மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளில் தற்காத்துக் கொள்ளச் செய்தல்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தற்காப்பு கலை பயிற்சி ஆரோக்கியம்,மன உறுதி, தன்னம்பிக்கை மற்றும் சுய பாதுகாப்பு ஆகியவை பல முக்கிய நன்மைகளை வழங்குகிறது. எதிர்பாராத சூழ்நிலைகளில் ஏற்படும் தாக்குதல்களில் இருந்து தங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பதை கராத்தே கற்றுக்கொடுக்கிறது. எதிரியின் பலவீனத்தை அறிந்து, சரியான முறையில் தற்காத்துக் கொள்ள இது உதவுகிறது.
கராத்தே பயிற்சியின் போது மனதை ஒருமுகப்படுத்துவது மிகவும் அவசியம். இது மூளையின் செயல்பாட்டை அதிகரித்து, அன்றாட வாழ்க்கையில் எந்த ஒரு செயலிலும் கவனச்சிதறல் இல்லாமல் செயல்பட உதவுகிறது.
தன்னைத் தானே தற்காத்துக்கொள்ள முடியும் என்ற திறன் வளரும் போது, இயற்கையாகவே ஒருவருக்கு அதீத தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகிறது. இது பயத்தைப் போக்கி, சவால்களை எதிர்கொள்ளும் திறனைத் தருகிறது என்று பேசினார். கராத்தே பயிற்சியாளர் பயிற்சி அளித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக தலைமை நிருபர்
-ஈசா.







