
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே டாடா ஏஸ் வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, கல்லூரி பேருந்து மோதி கொத்தனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம், புதூர் விநாயகர் நகரைச் சேர்ந்தவர் வரதராஜ் மகன் கருப்பசாமி (45), கொத்தனார். இவர் விளாத்திகுளத்திற்கு கொத்தனார் வேலைக்காகத் தனது ஹோண்டா ஷைன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த டாடா ஏஸ் வாகனத்தை முந்திச் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது விளாத்திகுளத்தில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து மீது இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கருப்பசாமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த புதூர் காவல் நிலையப் காவல்துறையினர், கருப்பசாமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து, பேருந்து ஓட்டுநர் தேவதாஸ் (63) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.





