
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள நகராட்சி கால்பந்து மைதானம் தரமற்ற முறையில் உள்ளது. ஐந்து வருடத்திற்கு முன்பாக இந்த மைதானம் மிகவும் புகழ்வாய்ந்த மைதானமாக இருந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நகராட்சி ஆய்வாளர்,ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஆகிய முக்கியப்பட்ட அதிகாரிகளிடம் புகார்களும் மனுக்களும் அளித்தும் செய்திகளின் வாயிலாக தெரிவித்தும் கண்டும் காணாமல் செல்கின்றனர். அரசியல்வாதிகளும் கண்டு கொள்வதில்லை.
இந்த மைதானத்தில் கால்பந்து விளையாட்டு அழிந்து போகும் தருவாயில் உள்ளது. இதற்கு மேலாவது இந்த மைதானத்தை பராமரிக்க நடவடிக்கை எடுத்தால் கால்பந்து வீரர்களுக்கும் வருங்கால இளைஞர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று அந்த பகுதியில் உள்ள விளையாட்டு வீரர்கள் கூறிவருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார் பேபி.







