
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வரலட்சுமி நோன்பு தினத்தை முன்னிட்டு 1000 பெண்கள் கலந்து கொண்ட சுமங்கலி பூஜை வழிபாடு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத வரலட்சுமி நோன்பையொட்டி மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
வரலட்சுமி நோன்புயேட்டி விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1000 சுமங்கலி பெண்கள் வாழை இலை போட்டு அதில் மஞ்சள்,குங்குமம்,பச்சரிசி.எலுமிச்சைபழம்,வளையல் வைத்து பச்சரிசியின்,மேல் அலங்கரிக்கப்பட்ட கலசம் வைத்து மீனாட்சி அம்மனுக்கு விளக்கேற்றி,சட்டைதுணி தேங்காய்,வாழைப்பழம்,வெற்றிலைபாக்கு மற்றும் படையல் பொருட்களை வைத்து சிறப்பு பூஜை செய்தனர், தொடர்ந்து கலசத்திற்கு குங்கும அர்ச்சனை செய்யப்பட்டு குலவையிட்டு சுலோகம் சொல்லி மாங்கல்யம் அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து பக்தர்களுக்கு நோன்பு கயிறு கட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது, தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வரலட்சுமி நோன்பு சுமங்கலி பூஜைக்கு வந்த பெண்களுக்கு கோவில் உழவாரப்பணி குழு சார்பில் வாழையிலை, வளையல்,சட்டைதுணி உள்ளிட்ட பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.








