
கோவை: 24.08.2026-ம் தேதி, தமிழக அரசின் “போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு” என்ற இலக்கை முன்னிறுத்தியும், கோவை மாநகரை ண“போதையில்லா கோவை” என்ற நிலையை உருவாக்கும் நோக்கத்துடனும், கோவை மாநகர் தெற்கு காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் ரஅவர்களின் உத்தரவின்படியும், போத்தனூர் சரக உதவி ஆணையர் மற்றும் குனியமுத்தூர் சரக உதவி ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதன்படி, D3 போத்தனூர் காவல் ஆய்வாளர், D4 குனியமுத்தூர் காவல் ஆய்வாளர் மற்றும் D2 செல்வபுரம் காவல் ஆய்வாளர் ஆகியோர் தங்களது காவல் நிலைய போலீஸ் குழுவினருடன் இணைந்து, தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள வீடுகள், அறைகள் மற்றும் ஆண்கள் தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
குறிப்பாக, போத்தனூர், குனியமுத்தூர், செல்வபுரம், பிகே புதூர் மற்றும் பாலு கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள வீடுகள் மற்றும் அறைகள், ஆண்கள் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் பல்வேறு காவல் குழுக்களாகப் பிரிந்து ஒரே நேரத்தில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையில் 100-க்கும் மேற்பட்ட காவல் ஆளிநர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும், போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டில் ஈடுபடக்கூடிய நபர்களின் நடவடிக்கைகள் குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள பகுதிகளில் போதைப்பொருட்கள் புழக்கத்தில் உள்ளதா என்பது குறித்தும் முழுமையான சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஓணம் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக பெரும்பாலான கல்லூரி மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த நிலையில், மேற்கண்ட சோதனைகளின்போது எவ்விதமான தடை செய்யப்பட்ட பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மேற்படி திடீர் சோதனை நடவடிக்கையானது போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தில் ஈடுபடும் நபர்களுக்கு காவல்துறையின் தொடர் கண்காணிப்பு மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கை குறித்த அச்சத்தை ஏற்படுத்துவதோடு, பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே காவல்துறை மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்தது.
கல்லூரி மாணவர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாத்து, அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் பயன்பாட்டிற்கு எதிரான தொடர் வேட்டை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்கின்றனர் காவல்துறையினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர் – ஈசா









