தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச சிறுவர்களுக்கான ஃபேஷன் ஷோவில் கோவையை சேர்ந்த சிறுவன் இரண்டாம் இடம் பிடித்து அசத்தல்!!

கோவை: 15 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்ற இதில் இந்தியா சார்பாக தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட ஒரே சிறுவன் என்ற பெருமையை பெற்று கவனம் ஈர்ப்பு.

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவையை சேர்ந்த ரக்‌ஷன் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

தாய்லாந்து நாட்டில் அண்மையில் சர்வதேச அளவில் குழந்தைகளுக்கான புகழ்பெற்ற “ஜூனியர் மாடல் இன்டர்நேஷனல்” போட்டி நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அர்மேனிய,மலேசியா,நேபால், ரஷ்யா,பூஸ்ட்வான,என உலகம் முழுவதும் இருந்து சுமார் 15 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்ட இதில்,இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து ஒரே ஒரு போட்டியாளராக கோவையைச் சேர்ந்த சிறுவன் ரக்‌ஷன்,கலந்து கொண்டார்.

குழந்தைகளின் தன்னம்பிக்கை, தனித்திறன், ஒழுக்கம் மற்றும் மேடை ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த சர்வதேச போட்டியில், சிறுவன் ரக்‌ஷன் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.

இதில் அறிவுத்திறன், நேர்காணல் திறன், பாரம்பரிய உடை, மேடை நிகழ்த்துதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுகள் நடைபெற்றன. அனைத்து சுற்றுகளிலும் சிறப்பாக செயல்பட்ட சிறுவன் ரக்‌ஷன் வெற்றி பெற்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

சர்வதேச அரங்கில் பங்கேற்று தமிழகத்தின் திறமையை வெளிப்படுத்தி கோவை திரும்பிய சிறுவன் ரக்‌ஷனுக்கு மாநில இயக்குனர் சிவக்குமார் உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், சிறுவன் ரக்‌ஷனின் முயற்சிகளுக்கு பெற்றோர் அளித்து வரும் ஊக்கமும் ஆதரவும் பாராட்டத்தக்கது என பலரும் தெரிவித்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts