
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் சூரங்குடி அருள்மிகு ஸ்ரீ பெத்தநாச்சி அம்மன், முனியசாமி திருக்கோவில் ஆவணி மாதம் கொடை விழா முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.. சின்ன மாடு மற்றும் பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சின்ன மாட்டு வண்டி பந்தயத்தை கருப்பசாமி, அவர்கள் துவக்கி வைத்தார்கள்… பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தை விழா கமிட்டியாளர்கள் தொடங்கி வைத்தார்கள்.. சின்ன மாட்டு வண்டி சுமார் 41 ஜோடி காளைகளும், பூஞ்சிட்டு மாட்டுவண்டி சுமார் 80 ஜோடி காளை களும் கலந்து கொண்டு சீறிப்பாய் ந்தது…தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முறையாக மொத்தம் 121ஜோடி காளை கள் கலந்து கொண்டது..இந்தப் பந்தயம் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது..
இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் கலந்து கொண்டது.. சுட்டெ ரிக்கும் வெயிலை யும் பொருட்படுத்தாமல் காளைகள் சீரிப்பாய்ந்து.இன்று விடுமுறை நாள் என்பதால் சாலையில் இருபுறமும் மாட்டுவண்டி பந்தயத்தின் ரசிகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கண்டு ரசித்தனர்… வெற்றி பெற்ற மாட் டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு மற்றும் சால்வை அணிவித்தும் மரியாதை செய்தனர்.. விழா முடிந்ததும் அனைவருக்கும் அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.







