துளிர் வினாடி வினா போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு.

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் , கந்தர்வகோட்டை ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய துளிர் வினாடி வினா போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கந்தர்வகோட்டை செப் 08

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், கந்தர்வகோட்டை ரோட்டரி சங்கமும் இணைந்து துளிர் வினாடி வினா போட்டி போட்டி கந்தர்வகோட்டை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. இந்நிகழ்விற்கு வட்டார தலைவர் ரகமதுல்லா தலைமை வகித்தார். துளிர் வினாடி வினா போட்டியின் ஒருங்கிணைப்பாளராக மாவட்ட இணைச் செயலாளர் துரையரசன் செயல்பட்டார். வட்டாரச் செயலாளர் பாக்யராஜ் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கந்தர்வகோட்டை ரோட்டரி சங்கத்தின் தலைவர் முருகேசன், செயலாளர் வினோத் குமார், முன்னாள் தலைவர் பிரவீன், உறுப்பினர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் துளிர் வினாடி, வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி வாழ்த்தி பேசினார்கள். இந்நிகழ்வில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பாரதிதாசன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கந்தர்வகோட்டை தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, ஆசிரியர் பயிற்றுநர் செல்லத்துரை, அறிவியல் இயக்க நிர்வாகிகள் ரமேஷ், முருகன், பழனிவேல், கண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

முன்னதாக நடைபெற்ற வினாடி வினா போட்டி ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை துளிர் வினாடி வினா போட்டியும், ஜந்தர் மந்தர் வினாடி வினா போட்டி, ஒன்பது முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரு பிரிவும், 11 12 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவும் என மூன்று பிரிவுகளாக வினாடி, வினா போட்டி நடைபெற்றது. இதில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், தமிழ், கணிதம் உள்ளிட்ட தலைப்புகளில் வினாக்கள் இடம்பெற்றிருந்தன துளிர் வினாடி வினா போட்டியில் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் ஆறு, ஏழு, எட்டு பிரிவுகளில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வீரடிப்பட்டி முதலிடமும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டி இரண்டாம் இடமும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் கந்தர்வகோட்டை, பழைய கந்தர்வகோட்டை மூன்றாம் இடமும் இடம் பெற்றிருந்தன.

இதே போல் ஜந்தர், மந்தர் போட்டியில் வித்யா விகாஸ் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றிருந்தது. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பிரிவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றிருந்தது. 11, 12 ஆம் வகுப்பு நடைபெற்ற வினாடி, வினா போட்டியில் வித்திய விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதலிடமும், சிபிஎஸ்சி பள்ளி இரண்டாம் இடமும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கந்தர்வகோட்டை மூன்றாம் இடமும் பெற்று தேர்வு பெற்று இருந்தனர். துளிர் வினாடி, வினா போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் வருகிற 11/9/2026 அன்று புதுக்கோட்டை பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர்.

துளிர் வினாடி வினா போட்டிக்கான பரிசினை கந்தர்வகோட்டை ரோட்டரி சங்கம் வழங்கி சிறப்பித்தனர். நிறைவாக ஆசிரியர் வெள்ளைச்சாமி நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts