கோடிக்கணக்கில் செலவிடப்பட்ட இடம் குடி மன்னர்களின் கூடாரமாக மாறி உள்ளது

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள படகு இல்லத்தின் தண்ணீரை சுத்திகரிக்க கட்டப்பட்ட கட்டிடம் அப்பகுதியில் வரும் குடி மன்னர்களின் கூடாரமாக மாறி உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பகுதியில் இரவு நேரங்களில் போதைப் பொருள் பயன் படுத்த வசதியான இடமாக்கி மாற்றி வருகின்றனர் போதை ஆசாமிகள். அப்பகுதியில் சமூக விரோத கும்பல்கள் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. இது போன்ற இடங்களை காவல்துறை மற்றும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். எதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுத்தால் அதற்கு பயன் இருக்காது.

ஆகையால் இது போன்ற இடங்களை முன்னதாகவே காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டுனர்களும் பொதுமக்களும் கூறி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர் திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts