சென்னை ஐஐடி வளாகத்தில் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 10 மாணவர்களுக்கு அறிகுறி இல்லா தொற்று வந்துள்ளதால் ஐஐடி நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தில்லியில் 15 நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் இருப்பதைபோன்று ஒருநாளைக்கு தொற்று பாதிப்பு 10 முதல் 30 பேர் என்ற எண்ணிக்கையில்தான் இருந்து வந்தது. சிலநாட்கறாக தற்போது அது பல மடங்காக அதிகரித்து தொற்று பாதிப்பு சுமார் 500ல் தொடங்கி 1000ம் பேரை கடந்துள்ளது.
இதனால் தில்லியில் தொற்று பரவல் விகிதம் 1 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. கொரோனா பரவலால் தில்லியில் 5 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மகாராஷ்ட்ரா கேரளா ஒடிசா உத்திரபிரதேச உள்ளிட்ட மாநிலங்களின் தொற்று அதிகரிப்பால் இந்தியாவில் ஒட்டுமொத்த பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள் இந்த தொற்றை எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளது பொதுமக்கள் தாங்கள் முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசிகளை தங்களுக்கு செலுத்தி
தங்கள் நலனை உறுதி செய்துகொள்ளுமாறு வேண்டுகோளை தெரிவித்தார் மேலும்
பூஸ்டர் தடுப்பூசியை பலர் போடவில்லை அதனை போட்டுக்கொண்டு பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுமாறும் தெரிவித்தார்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியதாவது :- இந்த அதிவேக பரவல் நல்ல அறிகுறியல்ல என தெரிவித்துள்ள தமிழக மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார். மேலும் ஐஐடி வளாகத்தில் நேரில் ஆய்வு செய்து மேலும் பரிசோதனைகளை அதிகரிக்க உத்தரவிட்டதுடன் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைபிடித்து ஐஐடி வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்
-கலையரசன் , மகுடஞ்சாவடி.