
தூத்துக்குடி இன்சூரன்ஸ் துறையில் அன்னிய மூலதன உச்சவரம்பை 100சதவீதம் உயர்த்தும் மாசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கம் ஏஐபிஇஏ, பிஇஎப்ஐ மற்றும் ஜிஐசி மற்றும் முகவர்கள் முதல்நிலை அதிகாரிகள், ஊழியர்கள், வளர்ச்சி அதிகாரிகள், பென்சன்தாரர்கள், சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள எல் ஐ சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத்தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். கோட்டச்சங்க இணைச்செயலாளர். சீனிவாசன் துவக்கவுரையாற்றினார். பிஇஎப்ஐ சார்பாக தங்கமாரியப்பன், ஏஐபிஇஏ சார்பாக கிருஷ்ண மூர்த்தி, எல்ஐசி பென்சனர் சங்கம் சார்பாக சேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். சிஐடியு மாநில துணைத்தலைவர் ரசல் நிறைவுரையாற்றினார். மகளிர் துணைக்குழு இணை அமைப்பாளர் ரமணி நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.











