போத்தனூர் போலீசார் மாஸ்..! பிரபல கொள்ளையனை சுட்டுப் பிடித்தனர்….

 

திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரபல கொள்ளையனை கோவை தனிப்படை போலீஸார் இன்று திருச்சியில் சுட்டுப் பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்தவர் ராஜசேகர் (32). இவர், திண்டுக்கல் வடக்கு நகர காவல் நிலையத்தில் சந்தேக, சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக உள்ளார். இவர் மீது கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு உட்பட 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கோவை போத்தனூர் போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொள்ளை வழக் இல கோவை தனிப்படை போலீசார் ஒருவரை கைது செய்தனர், அவர் கொடுத்த தகவலின்படி, அந்த கொள் ளையில் திண்டு திண்டுக்கல்லை சேர்ந்த ராஜசேகருக்கும் தொடர்பு இருந்தது தெரியவுத் ந்து, இதையடுத்து ராஜசே கரை சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமயிலான போலீசார் தேடி வந்தனர்.

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ  

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சீனிவாசநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பதுங்கியிருந்த ராஜசேகரை  கோவை போத்தனூர்  தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் பிடிபடாத ராஜசேகர், தனிப்படையினரை அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார்.

ஆனால், அதை பொருட்படுத்தாது ராஜசேகரை பிடிக்க முயன்ற தனிப்படை உதவி ஆய்வாளர் பாஸ்கர், முதல்நிலை காவலர் கண்ணன் ஆகியோரை ராஜசேகர் அடுத்தடுத்து அரிவாளால் வெட்டினார். இதனால், தங்களது உயிரை தற்காத்துக்கொள்வதற்காக, உதவி ஆய்வாளர் பாஸ்கர் முதலில் ராஜசேகரின் இடது கால் தொடையிலும், பின்னர் இடது விலாவிலும் துப்பாக்கியால் சுட்டார். இது குறித்து தகவலறிந்த எடமலைப்பட்டிபுதூர் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த உதவி ஆய்வாளர் பாஸ்கர், முதல்நிலை காவலர் கண்ணன் மற்றும் கொள்ளையன் ராஜசேகர் மூவரையும் மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்’ என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை தனிப்படை போலீஸாரை கொல்ல முயன்ற பிரபல கொள்ளையன், திருச்சியில் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திண்டுக்கல் மாவட்டம் பெரிய கடைவீதியை சேர்ந்த ராஜசேகரன் (வயது 35) வீடு புகுந்து திருடுவதில் பலே ஆசாமி, இவர் மீது கோவையில் 5 வழக்குகளும், செட்டிநாடு, திருச்சி, அருப்புக் கோட்டை, பழனி, கீரனூர், அவினாசி, தச்சநல்லூர், பெரம்பலூர், உடுமலைப்பேட்டை சத்திரபட்டி உள்பட தமிழ்நாடு முழுவதும் 70 திருட்டு வழக்குகள் உள்ளன. 2 கொலை வழக்கும் உள்ளன. வீடுகளை நோட்டமிட்டு திருடுவதிலும், எத்தகைய பூட்டாக இருந் தாலும் அதனை உடைத்துவிடுவதிலும் கைதேர்ந்தவர். பிரபல கொள்ளையனை போத்தனூர் போலீசார் சுட்டு பிடித்ததை கோவை மற்றும் போத்தனூர் பகுதி மக்கள் வெகுவாக போத்தனூர் போலீசாரை பாராட்டி வருகின்றனர்.

MMH.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts