வால்பாறை படகு இல்லம் அருகே பயங்கர விபத்து!!

கோவை மாவட்டம் வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் இன்று காலை 8:35 மணியளவில் படகு இல்லம் (Boat House) அருகே நடந்த கோரமான சாலை விபத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

​வேகமாக வந்ததாகக் கூறப்படும் சரக்கு வாகனம் சாலையோரம் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

​மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்துள்ளனர். ரத்த காயங்களுடன் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் ​விபத்தில் காயம் அடைந்த நபர்களின் நிலை என்ன என்பது குறித்து முழுமையான தகவல் இன்னும் கிடைக்கப் பெறவில்லை மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வால்பாறை

-பேபி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts