
கோவை மாவட்டம் வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் இன்று காலை 8:35 மணியளவில் படகு இல்லம் (Boat House) அருகே நடந்த கோரமான சாலை விபத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வேகமாக வந்ததாகக் கூறப்படும் சரக்கு வாகனம் சாலையோரம் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்துள்ளனர். ரத்த காயங்களுடன் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் விபத்தில் காயம் அடைந்த நபர்களின் நிலை என்ன என்பது குறித்து முழுமையான தகவல் இன்னும் கிடைக்கப் பெறவில்லை மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வால்பாறை
-பேபி.










