கந்தர்வகோட்டை அக்கட்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து வழிப்புணர்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். ஆங்கில ஆசிரியை சிந்தியா அனைவரையும் வரவேற்றார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தரவகோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா சாலை பாதுகாப்பு குறித்து பேசும் பொழுது;

சாலை விபத்துக்கள் நமது சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.தினந்தோறும் செய்தித்தாள்கள் மூலமாகவும், தொலைக்காட்சிகள் மூலமாகவும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை நாம் மிகுதியாக அறிகிறோம்.இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம் ஆகும்.
சாலையில் விபத்துகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர் பணி செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும், ஓட்டுனர்பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது.சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு என்பது, சாலை விதிகளைப் பின்பற்றுவதன் மூலம் விபத்துகளைத் தடுத்து, உயிர்களைக் காப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.
வாகன ஓட்டிகளுக்கு
தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கட்டாயம் அணிய வேண்டும்.
அதிவேகம், தவிர்க்கவும் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டுடன் செல்ல வேண்டும்.
மொபைல் போன் பயன்பாடு, ஓட்டும்போது மொபைல் போனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
போக்குவரத்து சைகைகள் சிக்னல் விளக்குகள் மற்றும் போக்குவரத்து காவலர்களின் சைகைகளை மதிக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கக் கூடாது.
பாதசாரிகளுக்கு
சாலையைக் கடத்தல் சாலையைக் கடக்கும் முன் இருபுறமும் வாகனங்கள் வரவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே கடக்க வேண்டும்.
வேகமாக ஓடுவது, சாலையை வேகமாக ஓடி கடக்க முயற்சிக்கக் கூடாது.
சாலையில் நிற்பது, சாலையின் திருப்பங்கள், முக்கிய சாலைகள் மற்றும் கடக்கும் இடங்களில் நின்று பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
சாலை பாதுகாப்பு என்பது வெறும் சட்டமல்ல, அது நம் வாழ்வின் பாதுகாப்பு சாலை விதிகளைப் பின்பற்றுவோம், விபத்துகளைத் தவிர்ப்போம், பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வோம்” என்பதே அனைவரின் குறிக்கோளாக இருக்க வேண்டும் எனவும், மாணவர்கள் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார். நிறைவாக கணித பட்டதாரி ஆசிரியை மணிமேகலை நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts