உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு மிதிவண்டியின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு!!

கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு மிதிவண்டியின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கந்தர்வகோட்டை ஜீன் 11

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக மிதிவண்டி தினத்தை முன்னிட்டு மாணவர்கள் தினந்தோறும் மிதிவண்டி ஓட்ட வேண்டும் எனவும், மிதிவண்டி ஓட்டுவதன் மூலம் உடலுக்கு சிறந்த உடற்பயிற்சியை பெற முடியும் எனவும், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய தலைவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா உலக மிதிவண்டி தினம் குறித்து பேசும் பொழுது உலக மிதிவண்டி தினம் ஆண்டு தோறும் ஜூன் 3 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மலிவான, தூய்மையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து சாதனமான மிதிவண்டியின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையால் 2018-ல் பிரகடனப்படுத்தப்பட்டது. எரிபொருள் தேவையில்லாததால் காற்று மாசு மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் மிதிவண்டி முக்கியப் பங்கு வகிக்கிறது.

மிதிவண்டியின் நீண்டகால பயன்பாடு மற்றும் பல்துறைத்திறனை அங்கீகரிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. மாணவர்கள் அனைவரும் பொதுமக்களுக்கு மிதிவண்டியின் அவசியம் குறித்தும், தினந்தோறும் மிதிவண்டியை பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பேசினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts