
மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய முக்கிய நிர்வாகியான மூகாம்பிகா ரத்தினம் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டுள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாண்புமிகு தமிழக முதல்வர் விஜய் அவர்களின் தலைமையில் செயல்படும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் திரு. நா. ஆனந்த் அவர்கள் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக மாண்புமிகு அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்களிடம் ஆசி பெற்றதாக மூகாம்பிகா ரத்தினம் தெரிவித்துள்ளார்.
கட்சியில் இணைந்தது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் என்றும் எங்கும் சமூக நீதியை நிலைநாட்டவும் மகளிர் மேம்பாட்டிற்காகவும் பொது நலத்திற்காகவும் நடுநிலைமையோடு தொடர்ந்து செயல்படுவேன் என்று உறுதிபடக் குறிப்பிட்டுள்ளார். மூகாம்பிகெ ரத்தினத்தின் இந்த புதிய அரசியல் பயணம் தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் அணி மற்றும் களப்பணிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர்
உங்கள் STAR.M.சுரேஷ்குமார்.











