மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து மாநில செயலாளர் மூகாம்பிகா ரத்தினம் திடீர் ராஜினாமா!!

பொள்ளாச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு உறுப்பினரும், மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் மாநில செயலாளருமான மூகாம்பிகா ரத்தினம் தனது அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது தொடர்பாக கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;
தனது எதிர்கால அரசியல் மற்றும் சமூகப் பணிகளைக் கருத்தில் கொண்டு எவ்வித அவசரமும் இன்றி யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 7 ஆண்டுகள் கட்சியில் பணியாற்றியதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அவர் அரசியலைக் கற்றுக்கொடுத்த தலைவர் கமல்ஹாசனுக்கும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்ததற்கும், கட்சித் தொண்டர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

கட்சியில் இருந்து விலகினாலும் பெண்கள் முன்னேற்றம் குழந்தைகள் நலம் மற்றும் சமூக நலன் சார்ந்த தனது பொதுச்சேவைகள் தொடர்ந்து நீடிக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர்

உங்கள் 𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts